திருமணமான முதல் இரவில் மனைவி சொன்ன வார்த்தை: அதிர்ச்சியில் கணவன் செய்த செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் திருமணமான இரண்டே வாரத்தில் இளம் பெண் ஒருவர் கல்லூரி மாணவனுடம் ஓட்டம் பிடித்த சம்பவம், அவரது பெற்றோருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண், அங்கிருக்கும் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின் திருமணத்தின் முதல் இரவின் போது, அந்த பெண் நான் ஒருவரை காதலிப்பதாகவும், பெற்றோர் தான் என்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும் கணவனிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கணவன், உடனடியாக மறுநாள் காலை, தன்னுடைய மனைவியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று, உங்கள் மகள் யாரையோ காதலிப்பதாக கூறி, தன்னிடம் அழுகிறாள், இனிமேல் அவளுடன் என்னால் வாழமுடியாது என்று விட்டுச் சென்றுள்ளார்.

திருமணம் முடிந்து 2 வாரங்கள் கடந்த நிலையில் பெற்றோர் வீட்டில் இருந்த அந்த பெண் திடீரென மாயமானார். பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், ஆசிரியைக்கும், அவர் பணிபுரிந்து வரும் கல்லூரியில் படிக்கும் 20 வயதுடைய மாணவருக்கும் இடையே காதல் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் ஆசிரியை மாணவருடன் ஓட்டம் பிடித்தது உறுதியானதால், பொலிசார் அவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்