சாலை விபத்தில் உயிரிழந்த சக பெண் கலைஞர்: பிரபல தமிழ் நடிகை வெளியிட்ட கண்ணீர் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

பிரபல நடிகையும், நாட்டிய கலைஞருமான சுதா சந்திரனின் மேக்கப் கலைஞர் மற்றும் உடன் நடனமாடும் பெண் கலைஞர் உயிரிழந்தது குறித்து அவர் சோகத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ள நடிகை சுதா சந்திரன், நாட்டிய கலைஞராகவும் உள்ளார்.

இவரின் மேக் அப் கலைஞர் பிரவீன் மற்றும் சக நடன கலைஞர் தனுஜா சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

இது குறித்து சுதா சந்திரன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், ஓம் சாந்தி பிரவீன், உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன், என் மேக்அப் மேன் பிரவீன் சாலை விபத்தில் இறந்துவிட்டார் என பதிவிட்டுள்ளார்.

இன்னொரு பதிவில், ஓம் சாந்தி தனுஜா, மிக இளம் வயதில் உலகை விட்டு சென்றுவிட்டாய், நீ ஒரு அருமையான டான்சர் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்