ஆபாச படத்தில் கர்ப்பிணி மனைவி நடித்ததாக கதறும் கணவன்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் ஆபாச படங்களுக்கு அடிமையான கணவன், தனது மனைவியை ஆபாசபடத்தில் பார்த்தேன் என கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் மனைவி லட்சுமி. தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் மீண்டும் லட்சுமி கர்ப்பமானார்.

இந்நிலையில் ஆபாச படங்களுக்கு அடிமையானவராக வெங்கடேஷ் இருந்துள்ளார்.

அவர் சமீபத்தில் பார்த்த படத்தில் தனது மனைவி இருந்தார் என கூறி லட்சுமியை அடித்து உதைத்து அவர் மீது சந்தேகப்பட்டார்.

இதையடுத்து கர்ப்பிணி மனைவி லட்சுமியை காவல் நிலையத்துக்கு தரதரவென இழுத்து சென்ற வெங்கடேஷ், அவர் ஆபாச படத்தில் நடித்தார் என குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து சைபர் கிரைம் உதவியுடன் விசாரித்த பொலிசார் குறித்த ஆபாச படத்தில் நடித்தது என லட்சுமி இல்லை என உறுதி செய்து வெங்கடேஷிடம் கூறினர்.

ஆனால் இதை ஏற்க மறுத்த வெங்கடேஷ், லட்சுமி தான் அதில் நடித்தார் என பிடிவாதம் பிடித்தார்.

இதையடுத்து வெங்கடேஷுக்கு உளவியல் ரீதியான பிரச்சனை இருப்பதை உணர்ந்த பொலிசார் அவருக்கு மருத்துவ கவுன்சில் அளிக்க நினைத்தனர்.

ஆனால் இதற்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை. இது குறித்து பொலிசார் கூறுகையில், அதிகளவு சந்தேகபுத்தி மற்றும், ஆபாச படத்துக்கு அடிமையானது ஆகிய இரண்டும் சேர்த்து தான் வெங்கடேஷை இப்படி யோசிக்க வைக்கிறது.

அவருக்கு உளவியல் சிகிச்சையளிக்க முயன்று வருகிறோம் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்