பெண்கள் விடுதியில் ரகசிய கமெரா வைத்தது ஏன்? அதிரவைத்த தொழிலதிபரின் வாக்குமூலம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் விடுதியில் தங்கியிருந்த பெண்களை ரகசிய கமெரா மூலம் படம் பிடித்த தொழிலதிபர் பொலிசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் பலரையும் அதிரவைத்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தில் இருக்கும் பெண்கள் தங்கும் விடுதியை குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவி (48) என்பவர் நடத்தி வந்தார்.

பி.இ. பட்டதாரியான அவர் கட்டுமான நிறுவனமும் நடத்தி வந்தார்.

இந்த தங்கும் விடுதியில் கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியை உட்பட 7 பேர் தங்கி இருந்தனர். அவர்கள் மதுரை, புதுச்சேரி, புதுக்கோட்டை, கர்நாடகா, கொல்கத்தா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் முன்தினம் பேராசிரியை குளித்து விட்டு தலைமுடியை காய வைப்பதற்காக ஹேர்டிரையரை பயன்படுத்த அங்குள்ள மின்சார பிளக்கில் சொருகினார். ஆனால் பிளக்கில் அது நுழையவில்லை. எனவே அவர் பிளக்கை கழற்றி பார்த்தார்.

அப்போது அதனுள் சிறிய கேமரா இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து விரைந்து வந்த பொலிசார், அந்த விடுதியை சோதனை செய்ததில், 9 ரகசிய வயர்லெஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதை கண்டுப்பிடித்தனர்.

அதில் 3 குளியல் அறை, படுக்கை அறை விளக்கு, ஹாலில் உள்ள கடிகாரங்கள், ஹேங்கர், பூ ஜாடி, கண்ணாடி ஆகிய இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இந்த கேமராக்கள் மூலம் சஞ்சீவி பெண்களை ரகசியமாக படம் பிடித்தது தெரியவந்தது.

இதையடுத்து சஞ்சீவியை கைது செய்த பொலிசார், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை தரும் வகையில் இருந்தது.

நான் பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே ஆதம்பாக்கத்தில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்கள் தங்கும் விடுதி நடத்தினேன்.

கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்த வீட்டை வாடகைக்கு எடுத்தேன். இங்கு 7 பேர் தங்கி இருந்தனர்.

எனது மனைவி சித்தா மருத்துவர். அவர் சித்தா மருத்துவம் பார்ப்பதற்காக படுக்கை உள்ளிட்ட பொருட்களை வாங்கி அந்த வீட்டில் போட்டிருந்தேன்.

ஹாலில் உள்ள ஒரு பகுதியை சித்தா மருத்துவத்துக்கான அலுவலகமாக பயன்படுத்த முடிவு செய்திருந்தேன்.

அங்கு தங்கியிருந்த 7 பெண்களும் பகலில் வேலைக்கு சென்று விடுவார்கள் என்பதால் பகலில் ஹாலை சித்தா மருத்துவத்துக்கு பயன்படுத்த அவர்கள் அனுமதித்தனர்.

அவர்கள் அனைவரும் வேலைக்கு சென்ற பின்பு அங்கு வந்துவிடுவேன். அதன் காரணமாக எனக்கு கமெரா பொருத்துவது மிகவும் எளிதாகிவிட்டது.

கேமராக்கள் அனைத்தையும் நானே ரகசியமாக பொருத்தினேன். இந்த கேமராக்களை ஆன்லைனில் வாங்கினேன். ஒவ்வொரு கமெராவும் 2,500 ரூபாய் ஆகும்.

இந்த கமெராக்கள் உளவுத்துறையினர் பயன்படுத்தும் ரகசிய கேமரா ஆகும். பட்டன் வடிவில், ஹேங்கர் வடிவில் இந்த கேமராக்கள் இருந்தன. இந்த கேமராக்களில் மெமரி கார்டையும் பொருத்தி இருந்தேன்.

இந்த கேமரா ஆட்கள் நடமாடும் சத்தம் இருந்தால் மட்டுமே பதிவு செய்யும். மற்ற நேரங்களில் இயங்காது.

இந்த கேமராக்கள் மூலம் மெமரி கார்டில் பதிவான படங்களைத்தான் பார்க்க முடியும் என்பதால் தற்போது நவீன தொழில் நுட்பத்துடன் வைபை மூலம் இயங்க கூடிய 3 குண்டு பல்புகளுடன் கூடிய கேமராக்களை ஆன்லைன் மூலம் வாங்கினேன்.

இந்த கேமராக்களை பொருத்தினால் மெமரி கார்டை கழற்ற தேவையில்லை. வைபை மூலமே ஆபாச காட்சிகளை பார்க்கலாம் என்பதால் அதை பொருத்த முடிவு செய்திருந்தேன்.

விடுதியில் தங்கியுள்ள பெண்களை மிரட்டவே நான் கமெராக்களைப் பொருத்தினேன். ஆனால், கமெராவில் பதிவான வீடியோக்களை எடுப்பதற்கு முன் சிக்கிக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

விடுதியிலிருந்து பறிமுதல்செய்யப்பட்ட கேமராக்களில், சில வீடியோக்கள் இருந்துள்ளன. அதில், அங்கு தங்கியிருந்த பெண்கள் உடைமாற்றும் காட்சிகளும், கழிவறைக்குச் செல்லும் காட்சிகளும் முகம் கழுவும் காட்சிகளும் இருந்ததாக பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் அவரின் லேப்டாப்பில் சில வீடியோக்கள் இருந்துள்ளன. அது அதிர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருந்துள்ளது. ஏனெனில் அந்த வீடியோவில் இவர் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்