டிரைவருடன் நெருக்கமாக இருந்த முதல் மனைவி: உண்மை தெரிந்து கணவன் செய்த அதிர்ச்சி செயல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் டிரைவருடன் நெருக்கமாக இருந்த மனைவியை கொலை செய்து, ஏரியில் வீசிய கணவனை பொலிசார் கைது செய்தனர்.

பொன்னேரி அடுத்த காவல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருள்(31). வாத்து மேய்த்து பிழைப்பை ஓட்டி வரும் இவர் அக்கா, தங்கையான சோனியா(29), சூர்யா(26) என இரண்டு மனைவிகள் உள்ளனர்.

இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். வாத்து மேய்க்கும் அருளுக்கு சோனியா உதவியாகவும், சூர்யா, அதே பகுதியில் உள்ள கடை ஒன்றிலும் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், பொன்னேரியில் இருந்து பழவேற்காடு செல்லும் தனியார் பஸ் டிரைவருடன் சோனியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் அவர்கள் நெருங்கி பழகும் அளவிற்கு வந்துள்ளது. இதை அறிந்த அருள் சோனியாவிடம் கடந்த ஒரு மாதமாக சண்டை போட்டு வந்துள்ளார்.

நேற்றும் இருவருக்கும் இடையே இது தொடர்பாக வாக்குவாதம் நடந்ததால், ஆத்திரமடைந்த அருள் சோனியாவை அருகிலிருந்து உருட்டு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் சோனியா சம்பவ இடத்திலே துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பி இந்த கொலையை மறைப்பதற்காக உடலை, கோணியில் மூட்டையாக கட்டி, அருகில் உள்ள மடிமை கண்டிகை ஏரியில் வீசி விட்டு வீட்டிற்கு ஒன்றும் தெரியாதது போல் வந்துள்ளார்.

மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சூர்யா, வீட்டில் ரத்தக்கரை படிந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

சோனியாவை தேடினார். காணவில்லை. ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை உணர்ந்த அவர் பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் அவரின் வீட்டிற்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது அருளிடமும் விசாரித்துள்ளனர்.

அவர் மனைவியை அடித்து கொலை செய்து ஏரியில் உடலை வீசியதை அருள் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அருளை அழைத்து கொண்டு ஏரிக்கு பொலிசார் விரைந்தனர்.

அங்கு, கோணியில் கிடந்த சோனியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அருளை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்