ராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்ட 14 பேரும் தமிழர்கள் இல்லையா? பிரபல நடிகர் சர்ச்சை கருத்து

Report Print Raju Raju in இந்தியா

மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு என்று கூறிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ட்விட்டரில் வினா எழுப்பியுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், மூன்று தமிழ் பெண்களை கொன்றவர்களை விடுதலை செய்தது தவறு: வை கோ.

சரியான கருத்து. ராஜீவ் கொலையில் உடன் கொல்லப்பட்ட 14 பேரும் தமிழர்களா இல்லை பாகிஸ்தான்காரர்களா? இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.

தருமபுரி பஸ் எரிப்பு சம்பவத்தில் ஆயுள் தண்டணை பெற்று சிறையில் உள்ள அதிமுகவினர் மூவரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவெடுத்தது.

கடந்த 2000ஆம் ஆண்டு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண் பல்கலைக்கழக பேருந்து தீ வைத்து எரிக்கப்பட்டது.

பேருந்தில் சிக்கிக் கொண்ட கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து பலியாகினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மூவரும் விடுவிக்கப்பட்டதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதனை சுட்டிக்காட்டியே எஸ்.வி.சேகர் ராஜீவ் கொலையில் உடன் கொல்லப்பட்ட 14 பேரும் தமிழர்களா இல்லை பாகிஸ்தான்காரர்களா என வினவியிருக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers