காப்பகத்தில் திடீரென மாயமான 9 இளம்பெண்கள்: பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு

Report Print Vijay Amburore in இந்தியா

டெல்லியில் உள்ள காப்பகத்தில் ஒரு சிறுமி உட்பட 8 இளம்பெண்கள் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள தனியார் காப்பகம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையன்று வருகை பதிவேடு எடுக்கப்பட்டுள்ளது.

அப்போது 9 பேர் விடுதியில் இருந்து மாயமாகியிருப்பது தெரியவந்துள்ளது. காணாமல் போனவர்கள் எங்கு சென்றார்கள் என்பது பற்றிய காரணங்கள் தங்களுக்கு தெரியவில்லை என விடுதி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்குள் தான் அவர்கள் அனைவரும் மாயமாகியிருப்பதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், காப்பகத்தை சுற்றிலும் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

காணாமல் போனவர்களில் ஒருவர் மட்டுமே 18 வயதிற்குட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் கடத்தல்காரர்கள் அல்லது விபச்சார உரிமையாளர்களால் கடத்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers