என் சாவுக்கு இவங்க தான் காரணம்: தற்கொலை செய்வதை வீடியோ எடுத்த இளம் திருநங்கை.. அதிர்ச்சி காரணம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றிவரும் திருநங்கை நஸ்ரியா என்பவர், எலி மருந்தைக் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர், பல்வேறு போராட்டங்களைக் கடந்து காவலர் பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்நிலையில், நேற்றிரவு, நஸ்ரியா எலி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்த தற்கொலை முயற்சியைத் தனது செல்போனில் பதிவிட்டு, தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இதை அறிந்த சிலர், நஸ்ரியாவை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில் அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆயுதப்படையில் எழுத்தராகப் பணியாற்றும் பார்த்திபன், சார்பு ஆய்வாளர் ஜெயசீலன் மற்றும் ஆய்வாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் தன்னைப்பற்றியும், தனது நடத்தைகுறித்தும் தரக்குறைவாகப் பேசுவதாகவும், அவர்களது தொந்தரவினாலேயே தான் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் நஸ்ரியா கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து நஸ்ரியா, புகார் கூறியவர்கள் சார்பில் பேசிய ஆயுதப்படை ஆய்வாளர் முத்துராமலிங்கம், கடந்த ஆகஸ்ட் மாதம் தான் நஸ்ரியா இங்கு பணியில் சேர்ந்தார். அன்றிலிருந்து அவர் இங்குள்ள அலுவலகப் பணியிலேயே இருந்துவந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 2-ம் திதிதியிலிருந்து அவர் பணிக்கு வரவில்லை.

21 நாள்களாகப் பணிக்கு வராததால், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். இந்நிலையில் நேற்று, மாவட்ட காவல் அலுவலகம் வந்த அவர், எங்கள் மீது வீண் பழி சுமத்தியுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers