மனைவி அழுகிய நிலையில் கிடந்தது தெரியாமல் ஊர் முழுக்க தேடி போஸ்டர் ஒட்டிய கணவன்: உடலை பார்த்து கதறிய பரிதாபம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருச்சி மாவட்டத்தில் கடந்த 1 ஆம் திகதி அழுகிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

அவருடைய கழுத்தில் சுமார் 15 பவுன் நகை அப்படியே இருந்தால் இது நகைக்காக நடைபெற்ற கொலை இல்லை என்பதை உறுதி செய்தனர் பொலிசார்.

மனநிலை பாதிக்கப்பட்ட ஜெகதீஸ்வரி கோவிலுக்கு செல்வதாக சொல்லி சென்றவர் காணமால் போயுள்ளார்.

அவருடைய கணவர் ராஜசேகர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காமல் ஜெகதீஸ்வரியை பார்த்தால் தனக்கு தெரிவிக்கும் படி அவருடைய புகைப்படம் ஒட்டிய போஸ்டர்கள் ஒட்டினார்.

மனைவி வாய்காலில் அழுகி கிடப்பது தெரியாமல் போஸ்டர் ஒட்டிய கணவர், தன் மனைவியின் உடலை பார்த்ததும் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்