கற்பை சூறையாடும் நபர்....அவள் திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கொலை செய்தேன்: காதலனின் அதிர வைக்கும் வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் பாலத்தின் கீழ், கடந்த 21-ம் தேதி ஸ்ரீஜா என்ற இளம்பெண்ணின் சடலம் மிதந்து வந்தது கண்டெடுக்கப்பட்டது.

செவிலியராக பணியாற்றி வந்த இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்ததையடுத்து, ஸ்ரீஜா-வின் மொபைல் எண்ணுக்கு வந்த அழைப்புக்களை வைத்து விசாரணை நடத்தி மங்காடு பகுதியைச் சேர்ந்த விபின் (26) என்ற வேன் ஓட்டுநரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

பொலிசார் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

ஸ்ரீஜாவை நான் காதலித்து வந்தேன். அவரிடம் உல்லாசமாக இருக்க விரும்பியபோது சம்மதிக்காததால், மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தேன். ஐந்து மாதம் கற்பமான ஸ்ரீஜா தன்னைத் திருமணம் செய்யும்படி என்னிடம் வலியுறுத்தினார்.

நான் தட்டிக்கழித்ததால், காவல் துறையில் புகார் அளிக்கப்போவதாக என்னை மிரட்டினார். இதனால், கடந்த 20-ம் தேதி இரவு நாம் திருமணம் செய்துகொள்ளலாம் எனக்கூறி ஸ்ரீஜாவை பைக்கில் அழைத்துச்சென்றேன்.

தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் மேல் அமர்ந்து இருவரும் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்தோம். தாலி வாங்க பணம் இல்லை என நான் கூறியதால், கொலுசு மற்றும் பிரேஸ்லெட்டை கழற்றிக்கொடுத்தாள்.

அதன்பின்னர், அவளை ஆற்றில் தள்ளிவிட்டு அங்கிருந்து வந்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஓட்டுநரான விபின், தனது வேனில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவிகளைக் காதலிப்பதாக ஏமாற்றி கற்பைச் சூறையாடுவதை வழக்கமாகக்கொண்டுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்