சொகுசு காரில் ஜாலியாக போதையில் வந்த நடிகை காயத்ரி ரகுராம்: அம்பலமான உண்மை தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை அடையாற்றில் நடந்த வாகனச் சோதனையில் சொகுசு காரில் வந்த நடிகை காயத்ரி ரகுராம், குடிபோதையில் இருந்ததாகவும் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால், இந்த செய்தி பொய்யான செய்தி என்றும் தன்னை பற்றி தவறான செய்தி பரப்பப்படுகிறது என விளக்கம் அளித்தார். உண்மை மற்றும் பொய் இருதரப்பட்ட தகவல்கள் பரவி வந்த நிலையில், இந்த சம்பவம் நடந்தது உண்மைதான் என பொலிஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று நாங்கள் அடையாறு பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தோம். அப்போது அவ்வழியாக குடித்துவிட்டு சொகுசு காரில் சென்ற பெண்ணை மடக்கினோம். முதலில் அவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது.

காரை விட்டு இறங்கிய பிறகுதான் அவர் நடிகை காயத்ரி ரகுராம் என்று தெரிந்தது. நாங்கள் விசாரித்தபோது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். மது குடித்துள்ளாரா என்பதைக் கண்டறியும் கருவியில் அவர் ஊதியபோது 33 பாயின்ட்ஸ் எனக் காட்டியது.

இதையடுத்து, அவர்மீது குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தோம். டிரைவிங் லைசென்ஸ் அவரிடம் இல்லை. அதனால், அதுதொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers