உயிருக்கு உயிராக காதலித்த இளம்ஜோடி: இரு குடும்பத்திலும் நேர்ந்த திடீர் மரணம்... பரபர சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் இளைஞரும், இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இரண்டு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கனா மாநிலத்தின் ஜஹிராபாத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரும் நாகமணி என்ற பெண்ணும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

இந்த காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நாகமணிக்கு வேறு இளைஞருடன் நிச்சயம் ஆனது.

இதையறிந்த மகேஷ் தனது குடும்பத்தாருடன் நாகமணி வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது மகேஷின் தந்தை அஞ்சனா திடீரென விஷம் குடித்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த நாகமணியின் சகோதரர் ஜகதீஸ்வரும் விஷம் குடித்தார். இதன் பின்னர் நாகமணியும் விஷம் குடித்தார்.

இதையடுத்து மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அஞ்சனாவும், ஜகதீஸ்வரும் உயிரிழந்தனர்.

நாகமணிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers