திருமணமான பெண்ணை தன்னுடைய வலையில் வீழ்த்தியது எப்படி? கையும் களவுமாக பிடிபட்ட டிஎஸ்பி பற்றி திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவனுக்கு வேலை வாங்கி தருவதாக திருமணமான பெண்ணை டி.எஸ்.பி பாலியல்ரீதியாக பயன்படுத்திக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் கலிகிரி பகுதியைச் சேர்ந்த தம்பதி பிரசாத்-தனலட்சுமி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளதால், இவர்கள் வாழ்வாதாரத்தை தேடி ஹைதராபாத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது பிரசாத்தின் மனைவியுடன் பொலிஸ் கட்டுப்பாட்டு அறை டி.எஸ்.பி துர்கா பிரசாத்துக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் தனலட்சுமி குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கிக்க் ஒண்டு, கணவர் பிரசாத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதால், தனலட்சுமியை அவரை நம்பி நெருங்கி பழகியுள்ளார்.

இந்த பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு சென்றுள்ளது.

இந்நிலையில் துர்காபிரசாத் அமராவதி அருகிலுள்ள மங்களகிரி ஆயுதப்படை பொலிசுக்கு மாறுதலாகியுள்ளார்.

இதை தொடர்ந்து பிரசாத் - தனலெட்சுமி குடும்பத்தை திருப்பதியில் குடியமர்த்தியுள்ளார் டிஎஸ்பி துர்கா பிரசாத். அவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தனலட்சுமியும், டிஎஸ்பி துர்காபிரசாத்தும் அடிக்கடி தனிமையில் இருப்பதை கணவர் பிரசாத் கண்டுபிடித்தார். இதனால் இருவரையும் கையும், களவுமாக பிடிக்க பிரசாத் திட்டமிட்டார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை தனலட்சுமிக்கு போன் செய்த டிஎஸ்பி. திருப்பதியில் உள்ள வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். இதை எப்படியோ அறிந்து கொண்ட பிரசாத், இருவரையும் கையுளம் களமாக பிடிக்க காத்திருந்தார்.

டிஎஸ்பி துர்கா பிரசாத் வீட்டிற்கு வந்து மனைவி தனலட்சுமியுடன் தனிமையில் இருந்த போது, திருச்சானூர் பொலிசாருடன் பிரசாத் வீட்டிற்கு சென்றார். பொலிசார் வருவதை அறிந்து கொண்ட டிஎஸ்பி துர்காபிரசாத் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதை தொடர்ந்து, தனலட்சுமியை அழைத்து வந்து திருச்சானூர் பொலிசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் டிஎஸ்பி என்னுடைய கணவருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, தன்னை பாலியல்ரீதியாக பயன்படுத்திக் கொண்டார் என்று புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தலைமறைவான டிஎஸ்பி துர்கா பிரசாத் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்