கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு பெண் கொடுத்த முக்கிய பொருள்! கண்கலங்கிவிட்டேன் என பிரபல நடிகர் உருக்கம்

Report Print Santhan in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் டேனியல் உதவிய போது, பெண் ஒருவர் கொடுத்த உதவியைக் கண்டு கண்கலங்கியுள்ளார்.

தமிழகத்தில் கஜா புயல் காரணமாக டெல்டா பகுதி மக்கள் பெரும் சேதங்களை சந்தித்துள்ளன. இதனால் பலரும் உதவினாலும், குறிப்பிட்ட மக்கள் இன்றளவும் கூட, எங்களுக்கு எந்த ஒரு உதவியும் வரவில்லை, தண்ணீர் மட்டும் கிடைத்தால் கூட போதும் என்று வேதனையுடன் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான டேனியல் தன்னுடைய டுவிட்டர் பக்கம் ஒன்றில் புகைப்படம் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். நான் ஒரு விடயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

அதில் ஒரு அக்கா அவருடைய பெயர் சரியாக தெரியவில்லை. ஆனால் அவர் பிரட் கம்பெனியில் வேலை பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.

அவர் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒரு பிரட் டப்பாவையே கொடுத்தார். அப்போது அவர் தம்பி பாதிக்கப்பட்டவங்கள் எங்களுக்கு இன்னும் எதுவுமே கிடைக்கலனு சொல்றாங்க.

அவங்களுக்கு பாத்து கொடுங்கனு சொன்னாங்க. சரி என்று நாங்கள் திரும்பிய போது, அவர் மீண்டும் ஒரு பிரட் பாக்சை எடுத்து வந்து இந்தா தம்பி என்று கொடுத்தார்.

அவங்க படுற அந்த கஷ்டத்துலையும் அவங்க சொன்ன வார்த்தையே கேட்ட போது, என் கண்ணே கலங்கிடுச்சு என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்