ரஜினிகாந்த் பெயரை வைத்து இப்படி செய்தாரா பிரபல நடிகை? அதிர்ச்சியாக உள்ளது என வேதனை

Report Print Raju Raju in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் கொடுத்த நிவாரண பொருட்களை நடிகை கஸ்தூரி தான் விநியோகிப்பதாக வரும் செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பினார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் கொடுத்த நிவாரண பொருட்களை நடிகை கஸ்தூரி தான் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விநியோகிப்பதாக அவரே பேட்டியில் கூறியதாக ஒரு வளைத்தளம் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து ஏன் இப்படியான பொய்யான புகழை தேடுகிறீர்கள் என ரஜினி ரசிகர்கள் கஸ்தூரிக்கு டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த கஸ்தூரி, இந்த செய்தியை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது, குறித்த வலைதள சேனல் தவறான நோக்கத்தில் அந்த செய்தியை வெளியிட்டது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers