ஓட்டுக்காக இப்படியா? பொதுமக்களிடம் வேட்பாளர் செய்த செயல்: வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in இந்தியா

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் வேட்பாளர் ஒருவர், பொதுமக்களின் ஷூவிற்கு பாலிஷ் போட்டு நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், ராஷ்ட்ரிய ஆம்ஜன் கட்சி வேட்பாளர் ஷராத் சிங் குமார் என்பவர் நூதன முறையில் பிரச்சாரம் செய்தது பரபரப்பாகியுள்ளது. அதாவது, பொதுமக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக ஷராத் சிங் அவர்களின் ஷூவிற்கு பாலிஷ் போட்டு பிரச்சாரம் செய்கிறார்.

இந்த தனித்துவமான பிரச்சார முறை, தேர்தலுக்கான ஆசீர்வாதமாக மாறும் என அவர் கருதுகிறார். இதுகுறித்து ஷராத் சிங் குமார் கூறுகையில்,

‘இது ஒரு இலவச வாக்கு சேகரிக்கும் சின்னமாக இருந்ததால், எவரும் இதை முன்னெடுக்க விரும்பவில்லை. நாங்கள் இதை எடுத்து ஒரு ஆசீர்வாதமாக மாற்றுவோம்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக, தெலுங்கானா மாநிலத்தில் அகுலா ஹனுமந்த் எனும் சுயேட்சை வேட்பாளர் பொதுமக்களுக்கு செருப்பு வழங்கி, தான் ஆட்சிக்கு வந்து சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால் தன்னை இதனால் அடிக்கலாம் என வித்தியாசமாக பிரச்சாரம் செய்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers