மனைவியின் விபரீத தொடர்பால் அவர் கண்முன்னே கணவனுக்கு நேர்ந்த துயரம்: நடு இரவில் பயங்கரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் ஜவுளி வியாபாரி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவருடைய மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ராமசாமிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் (37). இவருடைய பொன்னுமணி(23) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென்று இரவு 12 மணிக்கு அவரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஜெயராமனை சரமாரியாக வெட்டி அவரை அங்கேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக்கினார்.

இது குறித்த தகவல் பொலிசாருக்கு, தெரிவிக்கப்பட்டதால், உடனடியாக விரைந்து வந்த பொலிசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அவருடைய மனைவியிடம் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, பொன்னுமணிக்கும், எதிர்வீட்டில் வசித்து வந்த அசோக்குமார்(27) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவர்களின் இந்த தொடர்பு ஜெயராமனுக்கு தெரியவந்ததால் அவர் கண்டித்துள்ளார்.

ஜெயராமனை இதற்கு மேல் விட்டால், கள்ளத்தொடர்பை தொடர முடியாது என்பதால், அசோக்குமார் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து நேற்றுமுன்தினம் இரவு ஜெயராமனை கொலை செய்வதற்காக அசோக்குமார் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அவரை பொன்னுமணி தடுத்துள்ளார்.

ஆனால் அவரை ஒரு அறையில் தள்ளிவிட்டு ஜெயராமனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு அசோக்குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

பொலிசார் அசோக்குமாரை தேடி வந்த நிலையில் அவர் மதுரையில் இருக்கும் காவல்நிலையம் ஒன்றில் சரணடைந்துள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் என்ன காரணத்திற்காக கொலை செய்தார் என்ற முழு விபரம் தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்