கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி.... இவருக்குத்தான் முதல் வீடு: நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து வீடுகளை கட்டித்தரும் பணியில் நடிகர் லாரன்ஸ் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேருக்கு வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் லாரன்ஸ் கூறியிருந்தார்.

தற்போது, அதன்படி வீடு கட்டித்தருவதற்காக கூரை வீட்டை இழந்த ஒரு மூதாட்டியை கண்டறிந்துள்ளனர்.

அவர்களுடன் அந்த மூதாட்டி உரையாடும் வீடியோவை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று மூதாட்டியிடம் குழுவினர் கேட்க, எனக்கு எதுவும் வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு `ஒரு குடிசை மட்டும் போதும்' என்று கூறுகிறார்.

இந்த வீடியோ பலரையும் நெஞ்சை உறையவைத்துள்ளது. இந்த மூதாட்டிக்கு தனது முதல்வீட்டை கட்டித் தருவதாக லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்