உச்சகட்ட போதையில் நடிகை காயத்ரி ரகுராம்: எதற்காக என்னை இப்படி செய்கிறீர்கள் என கொந்தளிப்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

மதுபோதையில் கார் ஓட்டிக்கொண்டு வந்த நடிகை காயத்ரி ரகுராம் பொலிசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தியுள்ளார்.

பாஜக கட்சியை சேர்ந்தவரும், பிக்பாஸ் புகழுமான நடிகை காயத்ரி ரகுராம், சென்னை அடையார் பகுதியில் காரை ஓட்டி வந்தபோது, அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது.

காரில் இருந்து கீழே இறங்காமல் தன்னை அங்கிருந்து போகவிடும்படி பொலிசாரிடம் காயத்ரி ரகுராம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனையடுத்து பொலிசார் அவரது அருகில் சென்று முகர்ந்து பார்த்தபோது அவர் மது போதையில் இருப்பது தெரியவந்தது.

டிகையை சமாதானப்படுத்திய பிறகு சோதித்ததில் 33 சதவீதம் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் காரின் ஆவணங்களை காட்டச்சொல்லி சரிபார்த்தனர். அவரது டிரைவிங் லைசென்சை கேட்ட போது அது அவரிடம் இல்லை என தெரியவந்தது.

இதனையடுத்து நடிகை காயத்ரி ரகுராம் மீது, போதையில் அதிவேகமாக கார் ஓட்டியது மற்றும் லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியது ஆகிய குற்றங்களுக்காக வாகனச் சட்டப்பிரிவுகளின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி அவரிடம் போலீசார் ரூ. 3,500 அபராதம் வசூலித்தனர்.

காயத்ரி ரகுராம் உச்சகட்ட போதையில் இருந்ததால் அவரை கார் ஓட்ட போலீசார் அனுமதி மறுத்தனர். பொலிசாரே காரை ஓட்டிச்சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள காயத்ரி ரகுராமின் வீட்டில் அவரை கொண்டு போய் பத்திரமாக விட்டு விட்டு வந்தனர்.

ஆனால், இந்த செய்தியை காயத்ரி ரகுராம் மறுத்துள்ளார். என்னை பற்றி செய்திகள் வெளியிடுவதற்கு முன்னர், அது உண்மையான செய்தியா என என்னிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்றும் எதற்காக இப்படி ஊடகங்கள் தொடர்ந்து என்னை தொந்தரவு செய்கிறார்கள் என தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers