சிறையில் இருக்கும் நளினி வாடும் தமிழர்களுக்கு செய்த நெகிழ்ச்சி செயல்!

Report Print Deepthi Deepthi in இந்தியா

கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை இழந்தும், மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். நளினி ஜெயிலில் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். கைதிகளுக்கான துணிகளை தினமும் தைத்து கொடுக்கிறார்.

இதன் மூலம் கடந்த மாதம் ரூ.1000 கூலி வாங்கினார். அந்த பணத்தை ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாளிடம் நிவாரணத்துக்கு அளிக்கும்படி வழங்கினார்.

மதுரை மத்திய சிறையிலுள்ள அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன் ரூ 5000- ஐ, தனது வழக்கறிஞர் திருமுருகன் மூலமும் நிவாரண நிதி அனுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்