இத்தனை கோடி சம்பளம் வாங்கும் நடிகர் அஜித்தால் இவ்வளவு தான் கொடுக்க முடிந்ததா? விமர்சனத்திற்குள்ளாகும் தகவல்

Report Print Santhan in இந்தியா

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர் அஜித்குமார் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ருத்ரதாண்டவம் ஆடிய கஜா புயலால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகள், உடமைகள் இழந்து தவித்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் பாதிப்பு உள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற பண உதவியோ அல்லது நிவாரணப் பொருட்களாகவோ அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் அஜித்குமார் கேரளா வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வளவு நிதி உதவி வழங்கினார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை.

அதே சமயம் தற்போது கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு அஜித் உதவினாரா?இல்லையா என்பது குறித்து கூட தெரியாமல் இருந்தது.

ஆனால் நேற்று முதலமைச்சரின் நிவாரணயுதவி பட்டியல் அறிவிப்புக்கு பின், அஜித் 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

ஆனால் அஜித்தின் இந்த உதவி பெரிய அளவிற்கு இல்லை எனவும் பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில் தற்போது இருக்கும் தமிழ் திரையுலகில் நவம்பர் மாதம் தமிழ்நடிகர் சங்கம் வெளியிட்ட சம்பளங்களின் பட்டியலில் நடிகர் அஜித்குமார் 4-வது இடத்தில் உள்ளார்.

அதாவது,

ரஜினி - ரூ. 60 கோடி

கமல் - ரூ. 30 கோடி (2010ல் இருந்து தயாரிப்பு குழுவுடன் இலாப பங்கு வைத்து கொள்கிறார்)

விஜய் - ரூ. 40 கோடி

அஜித் - ரூ. 30 கோடி

சூர்யா - ரூ. 18 முதல் 22 கோடி

விக்ரம் - ரூ. 25 கோடி

சிவகார்த்திகேயன் - ரூ. 20 கோடி

விஜய் சேதுபதி - ரூ. 8 கோடி

என வெளியிடப்பட்டது.

40 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் 40 லட்சம் ரூபாய் வரை(நிவாரண பொருட்கள்) உதவியுள்ளார். அதே போன்று 60 கோடி சம்பளம் வாங்கும் ரஜினி 50 லட்சம் ரூபாய்(நிவாரணப் பொருட்கள்)உதவி செய்துள்ளார்.

25 கோடி சம்பளம் வாங்கும் விக்ரம் 25 லட்சம் ரூபாய், அது ஏன் 8 கோடி சம்பளம் வாங்கும் விஜய் சேதுபதியே 25 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கும் நிலையில்,30 கோடி வாங்கும் நடிகர் அஜித் வெறும் 15 லட்சம் மட்டும் கொடுத்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

நடிகர் அஜித் நிதியுதவியாக மட்டுமே 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். நிவாரணப் பொருட்களாக ஏதேனும் தனியாக அனுப்பியுள்ளாரா என்பது அவர் சொன்னால் மட்டுமே தெரியும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்