இளைஞரை தூண்டிவிட்டு இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய வைத்த பெண்: புகார் கொடுக்க வந்த இடத்திலும் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் புகார் கொடுக்க வந்த பெண்ணை காவல் ஆய்வாளர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் உள்ள சாந்திநகர் பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் ரோஹன் கொன்ஜாரி என்பவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் இந்த காவல்நிலையத்திற்கு சமீபத்தில் வந்த இளம் பெண் ஒருவர், சதீஷ், சலீம் என்ற இரண்டு பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்ட புகார் கூறியுள்ளார்.

இதற்கு சதீஷின் முன்னாள் காதலி உதவியாக இருந்தாள் எனவும், பலாத்காரம் செய்த காட்சியை அவர்கள் வீடியோவில் படம் பிடித்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டி என்னிடம் பணம் பறித்துக் கொண்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த ரோஹன் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்துள்ளார். அப்போது அவர் புகார் அளித்த நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளாமல், புகார் கொடுத்த பெண்ணையே மிரட்டியுள்ளார்.

அதாவது, நான் சொல்வதை கேட்கவிட்டால் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதை வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ரோஹனுக்கு எதிராக காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அந்த புகாரில், சதீஷ் நக்கல்வார் என்ற வாலிபரை நான் காதலித்து வந்தேன்.

இதற்கு அவரது முன்னாள் காதலி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சதீஷிடம் இருந்து விலகிவிடுமாறு அவர் என்னை எச்சரித்தார். ஆனால், சதீஷூடனான எனது உறவு தொடர்ந்தது.

இதனால், ஆத்திரமடைந்த சதீஷின் முன்னாள் காதலி தனது நண்பன் சலீம் என்பவனை தூண்டி விட்டு என்னை பலாத்காரம் செய்ய வைத்தார். பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என ஒரு இடத்துக்கு என்னை அழைத்த அவர்கள், மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர்பானத்தை குடித்தேன்.

பிறகு சலீம் என்னை பலாத்காரம் செய்தார். இதை அவர்கள் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். சதீஷின் திட்டப்படிதான் இதெல்லாம் நடந்தது என்பது எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. பாலியல் வீடியோவை காட்டி மிரட்டி என்னிடம் பணம் பறிக்கத் தொடங்கினர்.

இதுபற்றி நான் சாந்திநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். சப் இன்ஸ்பெக்டர் ரோஹன் எனது புகாரை பதிந்து கொண்டு என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து ரோஹனை உடனே கைது செய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்ட போதும், அவர் தலைமறைவாக உள்ளதால், பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers