வீடு மட்டுமில்லண்ணே என்னோட மூன்றுசக்கர வண்டியும் போச்சுண்ணே: கஜா புயலால் நொறுங்கிய மாற்றுத்திறனாளி

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடுமையாக தாக்கிய கஜா புயலுக்கு குடியிருப்பையும் தமது ஒரே சொத்தான மூன்றுசக்கர வண்டியையும் பறிக்கொடுத்த மாற்றுத்திறனாளி ஒருவர் கதறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கஜா புயலுக்கு தமிழகத்தின் டெல்டா பகுதி 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

புயல் கரையைக்கடந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையிலும் அரசு போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மெத்தனம் காட்டி வருவதாகவே அப்பகுதி மக்கள் பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளான டெல்டா மாவட்டத்தில் குடியிருக்கும் சிவகுமார் என்ற மாற்றுத்திறனாளி தமது சோகத்தை பங்குவைத்துள்ளார்.

தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் குடியிருந்த வீடு புயலில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளதாக கூறும் அவர்,

வீடு போனது மட்டுமில்லண்ணே என்னோட மூன்றுசக்கர வண்டியும் போச்சுண்ணே எனக்கலங்கியது அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.

ஓவியத்திறமையால் இதுவரை பசியாறி வந்துள்ளதாக கூறும் அவர், தமது மூன்றுசக்கர வண்டி இல்லாமல் உணவுக்கு அல்லல் படும் நிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இவரது நிலையை உணர்ந்த சிலர் தாமாகவே முன்வந்து குடியிருப்பு ஒன்றுக்கான உதவிகளை செய்து தர இருப்பதாக சமூக வலைதளங்களில் வாக்குறுதி அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்