கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி..வேறொருவருடன் நெருக்கம்: நடந்த விபரீத சம்பவம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கள்ளக்காதல் ஜோடி தூக்குக்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (45), இவர் கூலித் தொழிலாளியாக இருக்கும் நிலையில், இவருடைய மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இந்த தம்பதிக்கு 2 மகன்கள். அவர்களில் ஒரு மகனுக்கு திருமணம் முடிந்து விட்டது. மற்றொரு மகன், தனது தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி (35) என்பவருடன் முத்துக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

லட்சுமியும் ஏற்கனவே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வசித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முத்துக்குமாரும், லட்சுமியும் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

முத்துக்குமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால், அவருக்கு முத்துலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் லட்சுமியின் வீட்டு கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டிற்குள் இரண்டு பேரும் ஒரே கயிற்றில் தூக்கில் பிணங்களாக தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த பொலிசார் இரண்டு பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers