கஜா புயலால் 7 நாட்கள் உணவின்றி தவித்த மக்கள்: தன்னார்வலரிடம் கேட்ட முதல் கேள்வி! நெஞ்சை உருக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நகை மாவட்டம் தலைஞாயிறு என்னும் பகுதியில் உள்ள வாட்டாக்குடி கிராம மக்கள் 7 நாட்களாக உணவின்றி சாப்பிடாமல் இருந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையானது கஜா புயலாக மாறி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டு கடந்து சென்றது.

இதனால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்றுவரை மீள முடியாமல் டெல்டா வாழ் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக தன்னார்வலர்கள் பலரும், பண உதவியும், பொருளுதவியும் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தமுஎகச தன்னார்வலர்கள் பலத்த சிரமத்திற்கிடையே தலைஞாயிறு பகுதியில் உள்ள வாட்டாக்குடி என்னும் கிராமத்திற்கு சென்றுள்ளனர். கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் 40 ஆண்டுகள் பின் தங்கிய கிராமத்தை போல அந்த கிராமம் சிதைந்த காணப்பட்டுள்ளது.

அங்கிருந்த கிராமமக்கள் அனைவரும் கடந்த 7 நாட்களாக உண்ண உணவின்றி, தங்குவதற்கு ஒரு நல்ல வீடு கூட இல்லாமல் இருந்துள்ளனர்.

தன்னார்வலர்கள் அங்கு வருவதை பார்த்த கிராமமக்கள், நீங்கள் சாப்பீட்டீர்களா? என கேட்டதோடு உடனடியாக அவர்களுக்கு கருப்பு வெல்லம் போட்ட பாலில்லாத டீ போட்டு கொடுத்துள்ளனர்.

கடும் பசியிலும் கூட அந்த கிராம மக்களின் செயல் தங்களை நெகிழ வைத்துள்ளதாக அங்கு சென்ற தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்