கஜா புயல் பாதிப்பு: யாருக்கும் தெரியாமல் நடிகர் அஜித் நிதியுதவி! எவ்வளவு தெரியுமா?

Report Print Vijay Amburore in இந்தியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அஜித் சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான கஜா புயல் தமிழக முழுவதையும் அப்படியே புரட்டி போட்டது.

இதில் பெரும் பாதிப்பிற்குள்ளான திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பலரும், தங்களுடைய உடமைகள், கால்நடைகளை இழந்து அன்றாட வாழ்வில் உணவிற்கு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், தன்னார்வலர்கள் பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு விரைந்து சென்று பொருளுதவிகளை செய்து வருகின்றனர்.

அதேசமயம் சினிமா துறை நடிகர்களும், நேரிடையாக சென்று மற்றும் ரசிகர்களின் உதவியுடன் பொருளுதவிகளை செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் அஜித் சார்பாக ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது என தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்