கணவனிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: மனைவி குடும்பத்தார் வெறிச்செயல்...நேர்ந்த விபரீதம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவரிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வினோத சம்பவம் நடந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் தனது மனைவியுடன் மாயமாகியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் கலபுராகி நகரை சேர்ந்தவர் அஜய் (40). பழங்குடி சமூகத்தை சேர்ந்த இவர் மகாராஷ்டிராவை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது.

இதன்பின்னர் அப்பெண்ணை பிரிந்த அஜய், ஜோதி (28) என்ற இரண்டாம் திருமணம் செய்துள்ளார். ஜோதியும் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.

அவர்கள் சமூக வழக்கப்படி மணமகன் தான் மணமகளுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டும். அதன்படி ஜோதியின் குடும்பத்தாருக்கு, அஜய் குடும்பத்தார் ரூ.50,000 கொடுத்த நிலையில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்கு பின்னர் மேலும் ரூ.2 லட்சம் வரதட்சணை வேண்டும் என கூறி ஜோதியின் சகோதரர்கள், அஜய்யை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்கள்.

இதன் காரணமாக அஜய் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அஜய்யும், ஜோதியும் மாயமானார்கள்.

இதையடுத்து ஜோதியின் குடும்பத்தார் தான் இருவரையும் கடத்தி வைத்திருப்பதாக அஜய்யின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் ஜோதி குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்