கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு யாரும் செய்யாத உதவியை அறிவித்த SRM: எத்தனை கோடி தெரியுமா?

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது என்று எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பாரிவேந்தர் அறிவித்துள்ளார்.

கஜா புயல் காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட சில மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், தங்கள் மக்கள் வாழ்வாதரங்களை தவித்து வருகின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பாரிவேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் படிக்கும் புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் கிடையாது. 4 மாவட்டங்களை சேர்ந்த 650 மாணாக்கர்களுக்கான 48 கோடி ரூபாய் கல்விக்கட்டணம் விலக்கு என்று அறிவித்துள்ளார்.

நேற்று தான் எஸ்.ஆர்.எம் பல்கலைகழக மாணவிக்கு விடுதி லிப்ட்டில் இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்