திருமணமாகிய, வயதில் மூத்த பெண்ணை மணந்த இளைஞர்: நேர்ந்த விபரீத சம்பவத்தின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் வயதில் மூத்த பெண்ணை இளைஞர் மணந்த நிலையில் சண்டை காரணமாக மனைவியை லொறியால் ஏற்றி கொலை செய்துள்ளார்.

டெல்லியை சேர்ந்தவர் அகிலேஷ் பால் (32). லொறி ஓட்டுனராக உள்ளார். இவர் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்த விபா (38) என்ற பெண்ணை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

விபாவுக்கு முதல் கணவர் மூலம் 17 வயதில் மகளும், 18 மாத குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அகிலேஷுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி விபா அவருடன் சண்டை போட்டுள்ளார்.

இதையடுத்து மனைவி மீது கோபித்து கொண்ட அகிலேஷ் கை குழந்தையை தூக்கி கொண்டு தனது லொறியில் படுத்து தூங்கினார்.

பின்னர் நடுஇரவில் விபாவும், அவரின் மகளும் குழந்தையை அகிலேஷிடம் இருந்து எடுக்க அவர் லொறி அருகில் வந்தனர்.

பின்னர் குழந்தையை எடுத்து சென்றபோது கண்விழித்த அகிலேஷ், அவர்கள் மீது ஆத்திரம் கொண்டார்.

இதையடுத்து சாலையில் நடந்து சென்ற விபா மீது அகிலேஷ் லொறியை வேகமாக மோதியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் கை குழந்தைக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் 17 வயது சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டு மயங்கினார்.

இதன்பின்னர் பயந்து போன அகிலேஷ் லொறியை அங்கேயே விட்டு தப்பியோடினார்.

சாலையில் விபா மற்றும் பிள்ளைகள் கிடப்பதை பார்த்த அவ்வழியே வந்தவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் விபாவின் சடலத்தை கைப்பற்றியதோடு, அவர் மகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

முதலில் இது விபத்து என பொலிசார் நினைத்தனர். ஆனால் நினைவு திரும்பி விபாவின் மகள் நடந்த அனைத்து விடயங்களையும் சொன்ன பிறகே பொலிசாருக்கு நிலவரம் புரிந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த அகிலேஷை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்