அண்ணனுடன் ஓட்டம் பிடித்த தங்கை: அவமானத்தால் மூத்த அண்ணன் எடுத்த விபரீத முடிவு

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் அண்ணன் முறையுள்ள இளைஞருடன் தங்கை ஓடி போனதால் மனமுடைந்த பெண்ணின் சொந்த அண்ணன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் திலீப் (22). இவரின் பெற்றோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டனர்.

இதையடுத்து தனது தங்கையுடன் திலீப் வசித்து வந்தார். இந்நிலையில் திலீப்பின் உறவிக்கார இளைஞர் ஒருவர் அடிக்கடி அவர் வீட்டுக்கு வருவார்.

குறித்த இளைஞர் திலீப்புக்கும், அவர் தங்கைக்கும் உறவில் சகோதரர் ஆவார். திலீப்பின் தங்கையும், அந்த இளைஞரும் சகோதர சகோதரிகள் என்ற முறையை மீறி காதலிக்க தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து வீட்டை விட்டு இரு தினங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.

இதனையறிந்த திலீப் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அருகில் வசிப்பவர்கள் திலீப் வீட்டுக்கு வந்த போது அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் திலீப்பின் சடலத்தை கைப்பற்றி விட்டு இது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

முதற்கட்ட விசாரணையில், தனது தங்கையும், உறவுக்கார இளைஞரும் காதலிப்பது ஏற்கனவே திலீப்புக்கு தெரியும் என தெரியவந்துள்ளது.

இது குறித்து திலீப் தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும், அண்ணன் - தங்கை உறவு முறை உள்ளவர்கள் திருமணம் செய்வது எப்படி சரியாக இருக்கும் என புலம்பி வந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்