7 வயது மாணவனின் கையை கடித்து, கழுத்தை நெரித்த ஆசிரியர்: கமெராவில் வசமாக சிக்கிக் கொண்ட காட்சி

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் தன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவனிடம் ஆசிரியர் ஒருவர், அந்த மாணவனின் கையை கடித்து, தலையை பிடித்து ஆட்டி துன்புறுத்திய வீடியோ காட்சி தற்போது வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உத்திரப்பிரதேசத்தின் அலிகார் பகுதியில் 7 வயது மாணவன் தன்னுடைய ஆசிரியரிடம் டியூசன் பயின்று வந்துள்ளான்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஆசிரியர் அந்த மாணவனை தன் அணிந்திருந்த ஷுவால் அடிப்பதும், கையை கடித்து வைப்பதும், கழுத்தை நெரிப்பதும் என பயங்கரமாக துன்புறுத்தியுள்ளார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்...

இவை அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியதால் தற்போது வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் மாணவனின் பெற்று ஆசிரியர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்