சொதப்பிய வானிலை மையம்: கஜா புயல் குறித்து முன்னரே சரியாக கணித்த பள்ளி ஆசிரியர்

Report Print Raju Raju in இந்தியா

கஜா புயல் குறித்தும் அது வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்று 15 நாட்களுக்கு முன்பே அரசுப் பள்ளி ஆசிரியர் ந.செல்வகுமார் துல்லியமாக கணித்துள்ளார்.

மன்னார்குடியை சேர்ந்தவர் ந.செல்வகுமார். அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னார்வ அடிப்படையில் வானிலையை கணித்து கூறி வருகிறார். இவர் 15 நாட்களுக்கு முன்பே இந்த புயலை கணித்ததுடன், அது வேதாரண்யம் அருகே கரையை கடக்கும் என்பதை உறுதிபட தெரிவித்திருந்தார்.

ஆனால் இந்திய வானிலை ஆய்வு மையம், தொடக்கத்தில் கடலூர் ஸ்ரீஹரிகோட்டா இடையே புயல் கரையை கடக்கும் என்று தெரிவித்திருந்தது. மேலும், புயல் வலு குறைந்து கரையை கடக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இது தீவிர புயலாகவே கரையை கடக்கும் என்பதில் செல்வகுமார் உறுதியாக இருந்தார். அவர் கணித்தது போலவே தற்போது நடந்திருப்பதால், அவருக்கு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இது குறித்து செல்வகுமார் கூறுகையில், சிறு வயதிலிருந்தே நாளிதழில் வெளியிடப்படும் வானிலை தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தை பார்ப்பது என் வழக்கம்.

அதன் பின்னர் விசா கப்பட்டினம் துறைமுகம் அருகே இறால் முட்டை பொறிப்பகத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

அப்போது வானிலை தொடர் பான அறிவை வளர்த்துக் கொண்டு, அங்குள்ள மீனவர் களுக்கு வானிலை தொடர்பான தகவல்களை தெரிவித்து வந்தேன். 1996-ம் ஆண்டு நான் கணித்தபடியே மோசமான புயல் தாக்கி கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீனவர் கள் என்னிடம் வானிலை நிலவரங் களை கேட்கத் தொடங்கினர்.

2000-ம் ஆண்டில் ஆசிரியர் வேலை கிடைத்து வலங்கைமான் பகுதிக்கு வந்தேன். அப்போது செல்போன் பிரபலமடைந்த நிலையில், அங்கு வானிலையை கணித்து எஸ்எம்எஸ் மூலமாக தெரிவித்து வந்தேன்.

இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள விவரங்கள் அடிப்படையில்தான் நான் கணித்து வருகிறேன். இந்த முறை ஓமன் மற்றும் மேற்கு வங்கம் அருகே நிலவிய எதிர் புயல்களின் செயல்பாடுகளுடன் கஜா புயலை ஒப்பிட்டு பார்த்து, வேதாரண்யம் அருகேதான் புயல் கரையை கடக்கும் என்று உறுதியாக கூறினேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்