செல்போனால் நேர்ந்த விபரீதம்: பள்ளி மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் செல்போன் காணாமல் போனதால் மன அழுத்தத்தில் இருந்த பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் நிகிதா (16). இவர் அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

இரு தினங்களுக்கு முன்னர் நிகிதா தனது சகோதரர் பப்ளூவுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது தனது செல்போன் காணாமல் போனதை உணர்ந்தார்.

குறித்த செல்போனை நிகிதாவுக்கு அவர் தந்தை பரிசாக அளித்திருந்தார்.

எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த நிகிதாவுக்கு தந்தை ஆசையாக வாங்கி கொடுத்த செல்போன் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக மன அழுத்தத்தில் இருந்த நிகிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்