புறப்பட்ட 15 நிமிடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்: துணை விமானி மீது நடவடிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

டெல்லியில் இருந்து பாங்காங் நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இருந்த துணை விமானி மது போதையில் இருந்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான ஏ.எல்-332 என்ற விமானம் தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது.

அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனைக்கு உட்படாமல் விமானத்தில் ஏறிச் சென்றது டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

விமானம் புறப்பட்டு சுமார் 15 நிமிடங்களில் மீண்டும் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அரவிந்த் கத்பாலியாவிடம் 'பிரீத் அனலைஸர்’ கருவி மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மது போதையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

விமானம் திடீரென்று தரையிறக்கப்பட்டதை அடுத்து சுமார் 4 மணி நேரம் அந்த விமான பயணிகள் விமானித்தின் உள்ளேயே இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனிடையே விமானம் தரையிறக்கப்பட்டதன் காரணம் தொடர்பில் தகவல் அறித்த பயணிகள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர்.

விமானம் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முன்னர் விமானி உள்ளிட்ட ஊழியர்கள் எவரும் எந்தவிதமான போதை பொருட்களும் பயன்படுத்த தடை உள்ளது.

இதை உறுதி செய்வதற்காக பணியில் சேருவதற்கு முன்பு ஊழியர்களுக்கு போதை மருந்து சோதனை மேற்கொள்ளப்படும்.

ஆனால் சம்பவத்தன்று துணை விமானி அரவிந்த் கத்பாலியா குறித்த சோதனைக்கு உட்படாமல் பணியில் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்