காட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி: ஒருவன் கைது...தீவிர தேடுதலில் பொலிஸ்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தருமபுரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை என்பவர் மகள் சவுமியா விடுதியில் தங்கி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பண்ணிரெண்டாம் படித்து வந்தார்.

தீபாவளி பண்டிகைக்காக கடந்த 5ம் தேதி சொந்த ஊருக்கு வந்த மாணவி, அன்று மாலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்றார்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகிய இருவரும், மாணவியை பின் தொடர்ந்து சென்று, அவரது கை, கால்களை கட்டியும், வாயில் துணியை வைத்தும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடினர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், அந்த மாணவி திடீரென உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தருமபுரியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாணவிக்கு போதிய சிகிச்சை அளிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் , இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ரமேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்