ஆண் நண்பர்களுடன் இளம்பெண் செய்த செயலால் நடந்த விபரீதம்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் காரை ஓட்டி வந்த பெண், எதிரே வந்த காரின் மீது மோதியதால் காரின் உள்ளே இருந்த பெண் பரிதாபமாக இறந்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த ஷிவானி மாலிக் என்ற 22 வயது பெண், கடந்த வெள்ளிக்கிழமை தன் ஆண் நண்பர்களுடன் கிளப்பிற்கு சென்று மது அருந்திவிட்டு, இரவு 11 மணியளவில் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.

மது அருந்திய நிலையில் ஷிவானி காரை ஓட்டியதால், கார் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

கார் பஞ்சாபி பாக் மேம்பாலம் அருகே வந்த போது, எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் அந்த காரின் உள்ளே இருந்த பெண் ஒருவர் பரிதாபமாக இறந்துள்ளார்.

இது குறித்து தகவல்கள் தெரிவிக்கையில், விபத்திற்குள் சிக்கிய காரில் பயணம் செய்த குடும்பத்தினர் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துவிட்டதாகவும், உள்ளே 4 பேர் இருந்ததாகவும், அதில் பூனம்(38) என்ற பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் அந்த பெண்ணின் 13 வயது மகளும் பலத்த காயமடைந்துள்ளார். ஆண் நண்பர்களுடன் சேர்ந்து குடி போதையில் காரை ஓட்டி வந்த பெண்ணால், தற்போது 13 வயது சிறும் தன்னுடைய தாயை இழந்து நிற்கிறாள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்