தற்கொலை செய்து கொண்ட கணவன்: ஒரே வாரத்தில் இரண்டாவது திருமணம் செய்த மனைவி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் கணவர் தற்கொலை செய்து கொண்ட ஒரே வாரத்தில் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கேரளாவின் கஞ்சிரப்பாலே நகரை சேர்ந்தவர் சாதிக் (32). இவர் கடந்த மாதம் 31-ஆம் திகதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சாதிக் இறப்பதற்கு முந்தைய நாள் அவரின் மனைவியான தன்சி (20) தற்கொலை செய்யபோவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால் தற்கொலை செய்து கொள்ளாத அவர் கணவர் இறந்த ஒரு வாரம் கழித்து அஜய்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து தன்சி மீது அவரின் உறவினர்கள் பொலிசில் புகார் அளித்தனர்.

பொலிசார் தன்சியை விசாரித்து விட்டு விடுவித்தார்கள்.

இதையடுத்து தன்னை அஜய்குமாருடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி தன்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் அஜய்குமாருடன் தன்சி சேர்ந்து வாழ அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்