இறுதி சடங்கின் போது திடீரென எழுந்து நின்ற முதியவர்: தெறித்து ஓடிய பொதுமக்கள்

Report Print Vijay Amburore in இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தில் இறந்த முதியவர் இறுதிச்சடங்கில் போது, திடீரென உயிருடன் எழுந்துள்ள சம்பவம் அனைவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 95 வயதான ராம்.

வயது முதிர்ச்சியின் காரணமாக படுக்கையிலே கிடந்த ராம், தீபாவளியன்று எழாமல் நீண்ட நேரம் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர் ராம் இறந்துவிட்டதாக குடும்பத்திற்கு தெரியப்படுத்தினர். உடனே அவருடைய உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு வருகை தர ஆம்பித்தனர்.

உறவினர்கள் அனைவரும் அழுதுகொண்டிருக்கு, பூசாரியும், இறுதிச்சடங்கிற்கான வேலைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார்.அப்போது ராமின் உடலை கழுவ, அவருடைய நெஞ்சில் குளிர்ச்சியான நீரை ஊற்றியுள்ளனர். அடுத்த நிமிடமே திடீரென ராம் கண்விழுத்துள்ளார்.

இதனை பார்த்ததும் அங்கிருந்த உறவினர்கள் பயத்தில் திகைத்து போய் நின்றுள்ளனர். அதன் பின்னர் தான் தெரியவந்துள்ளது, ராம் நீண்ட நேரம் உறங்கிக்கொண்டிருந்துள்ளார் என்பது.

இந்த சம்பவம் குறித்து கூறியுள்ள அவருடைய மகன், தந்தை இறந்து விட்டதால், அனைவரும் சோகத்தில் மூழ்கிப்போனோம். ஆனால் அவர் திடீரென விழித்ததும் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதுதான் எங்களுடைய உண்மையான தீபாவளி என நினைத்தோம். அதனை நாங்கள் வெகுவிமரிசையாகவும் கொண்டாடினோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்