இறப்பிலும் பிரியாத தம்பதி: கணவர் இறந்தது கூட தெரியாமல் அருகில் இருந்த மனைவி

Report Print Vijay Amburore in இந்தியா

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கணவர் இறந்த செய்தி கேட்டு அடுத்த நிமிடமே மனைவியும் இறந்துள்ள சோக சம்பவம் நடந்துள்ளது.

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் 83 வயதான மகாலிங்கம். இவருடைய மனைவி அபூர்வ மணிக்கு 73 வயதாகிறது.

இந்த தம்பதியினருக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளார். இதில் 2 மகன்கள் சொந்த ஊரிலும், மற்ற 3 மகன்கள் சென்னையிலும் தங்கி வேலை செய்து வருகின்றனர். மகள் திசையன்விளை பகுதியில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளார்.

வயது முதிர்ச்சியின் காரணமாக தம்பதியினர் இருவருமே உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளனர். உள்ளூரில் தனித்தனியே வசித்து வரும் இரு மகன்களும் அடிக்கடி பெற்றோரையும் சென்று கவனித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் மூத்தமகன் மகாலிங்கம், தாய், தந்தையை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மகாலிங்கம் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் தாயும் இருந்துள்ளார்.

இதனையடுத்து தன்னுடைய உறவினர்கள் அனைவருக்கும் மகாலிங்கம் தகவல் கொடுத்துள்ளார்.

வீட்டிற்கு அதிகமானோர் வருவதை பார்த்த அபூர்வமணி, நடந்தது பற்றி கேட்டுள்ளார். அப்போது தான் அவருக்கு கணவர் இறந்தது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அபூர்வ மணி, சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்து உயிரை விட்டுள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்