தமிழகத்தை அச்சுறுத்தும் பன்றிக் காய்ச்சல்! இதுவரை 17 பேர் பலியானதாக அதிர்ச்சி தகவல்

Report Print Kabilan in இந்தியா

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலால் இதுவரை 17 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23,900 பேரில் 65 பேர் மரணமடைந்தனர். இந்நிலையில், இந்தாண்டு இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 12 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும், பன்றிக் காய்ச்சலால் 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த தகவலை தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்