வெளியூர் சென்றிருந்த மனைவி..பெற்ற மகளையே துஷ்பிரயோகம்செய்த தந்தை: அதன் பின் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததால், அந்த சிறுமி தற்போது கர்ப்பமாகியதையடுத்து, பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அங்கிருக்கும் தனியார் பஞ்சாலையில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 14 வயதில் மகளும் உள்ளனர். மகளின் பெயர் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜோதி வெளியூர் சென்றுள்ளார். அப்போது முருகன் தன்னுடை 14 வயது மகளை மிரட்டி தினந்தோறும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இதற்கு யார் காரணம் என்று தாய் மகளிடம் கேட்ட போது, தந்தை என்று கூறியதால், அதிர்ச்சியடைந்த ஜோதி உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து இது குறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார், சிறுமியை உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்