11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம்: கீழே குதித்த வீரர்.. நேர்ந்த சோக சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் ராணுவ பயிற்சியின் போது, பாரசூட் விரியாததால், 11 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த விமானப்படை வீரர் உயிரிழந்தார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்தீப் சிங். இவர் 5 ஆண்டுகளுக்கு முன் இந்திய விமானப்படையில் இணைந்தார்.

இந்நிலையில் ஆக்ரா ராணுவ பயிற்சி பள்ளி வளாகத்தில், பறக்கும் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் கீழே குதிக்கும் பயிற்சியில் அவர் ஈடுபட்டார்.

விமானமானது 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, ஹர்தீப் சிங் கீழே குதித்தார்.

அப்போது, அவரது பாராசூட் விரியாததால், அங்கிருந்து ஹர்தீப் தரையில் விழுந்தார்.

விழுந்த வேகத்தில் படுகாயமடைந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்