பேசிக்கொண்டிருந்தவள்....மயங்கிவிழுந்து உயிரிழந்தாள்: காட்டுக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை குறித்து தாயின் கண்ணீர்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தருமபுரி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த மாணவிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சிட்லிங் மலை கிராமத்தைச் சேர்ந்த கோமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ற மாணவி தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்துள்ளார் .

கடந்த 5ம் தேதி இயற்கை உபாதைக்காக அருகில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார் மாணவி கோமதி. மாணவியை பின் தொடர்ந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் ஆகியோர் கோமதியை கடத்தி அப்பகுதியில் உள்ள ஆற்று ஓடைப்பகுதியில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு செய்துள்ளனர்.

மாணவி கூச்சலிடவே அருகில் இருந்தவர்கள் ஓடிவர சதீஷும், ரமேஷும் தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து பலத்த காயமடைந்திருந்த கோமதியை தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

கடந்து 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

இந்நிலையில், கோமதிக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

காட்டுப்பகுதிக்கு சென்ற எனது மகளை சதீஷும், ரமேஷும் பின்தொடர்ந்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளனர். வாயில் துணியை வைத்து அடைத்து சத்தம் போடாதவாறு தடுத்துள்ளனர். ஊரார் வந்தபின் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்.

காயமடைந்த மகளை தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தோம். கடந்து 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டாலும் பெரிய முன்னேற்றம் ஏதுமில்லை. மருத்துவமனையிலும் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. சரியாகிவிடும் என்று மேம்போக்காக இருந்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

தாயார் கூறியதாவது, மகளின் வாயில் கோணியையும் துணியையும் வைத்து அடைத்துள்ளனர். அதனால் மகளால் அலறக்கூட முடியவில்லை. பெண்ணை தரதரவென்று இழுத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயற்சி செய்துள்ளனர்.

நாங்கள் வந்து பார்த்தபோது கோமதி மயக்கத்தில் இருந்தாள். இது குறித்து நாங்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்.

மேலும் பேசிய அவர், அடிக்கடி மயக்கம் வருவதாக கோமதி என்னிடம் தெரிவித்தார். தலையை ஸ்கேன் செய்து பார்த்தோம். எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நல்லபடியாக பேசிக்கொண்டுதான் இருந்தாள். வாந்தி வருவதாக கூறினார். திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உரிய தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்