துஷ்பிரயோகம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட 17 வயது சிறுமி: சிறுவர்களின் வெறிச்செயல்

Report Print Raju Raju in இந்தியா

ஆந்திராவில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பில்லாலா பத்மாவதி (17). இவர் தனது வீட்டருகில் வசிக்கும் ராஜூ என்ற தனது வயதுடைய சிறுவனை காதலித்து வந்தார். இதையறிந்த பத்மாவதியின் பெற்றோர் இருவரையும் கண்டித்தனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் பத்மாவதி அங்குள்ள காட்டு பகுதியில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனையில் பத்மாவதி பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்படுவதற்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக பத்மாவதியின் காதலன் ராஜூ உட்பட மூன்று சிறுவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மூவரும் தான் இந்த செயலை செய்தார்கள் என சந்தேகிக்கும் பொலிசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்