மனைவி இறந்த துக்கம் தாங்கமால் கணவர் எடுத்த சோக முடிவு: பரிதவிக்கும் குழந்தைகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குணபாலன் (43) ஜெயபாரதி தம்பதியினருக்கு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ஜெயபாரதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டது. மனைவியை நோயில் இருந்து விடுவிக்க குணபாலன் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி, இறங்கித் தொடர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனாலும், நோய் குணமடையவில்லை.

இந்நிலையில், ஜெயபாரதி எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். மனைவி இறந்த நாளில் இருந்து குணபாலனும் தனிமையில் மன விரக்தியுடன் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில், குணபாலனும் கடந்த சில தினங்களுக்கு முன்பு எலி மருந்து சாப்பிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், குணபாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயைத் தொடர்ந்து, தந்தையும் தற்கொலை செய்துகொண்டதால், குழந்தைகள் பரிதவித்து நிற்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்