எச்சரிக்கை விடுத்த விமானி.... சுற்றி வளைத்த ராணுவம்: விமான நிலையத்தில் திக் திக் நிமிடங்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் விமானி விடுத்த விமான கடத்தல் எச்சரிக்கையை அடுத்து ராணுவம் சுற்றி வளைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் அது விமானியின் கைப்பிழை எனவும், தவறுதலாக எச்சரிக்கை பொத்தானை அழுத்தியதாக பின்னர் விசாரணையில் தெரியவந்தது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையில் அரியானா ஆப்கான் ஏர் விமானம் ஒன்று கந்தகாருக்கு புறப்பட தயாராக இருந்தது.

திடீரென்று விமானியின் அறையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் ஒன்று பறந்துள்ளது.

விமானத்தை கடத்த முயன்றால் விமானி ரகசியமாக கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பொத்தானை விமானி அழுத்தியுள்ளார்.

குறித்த எச்சரிக்கை தகவல் கிடைத்த அடுத்த நொடி டெல்லி விமான நிலையம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விமானம் நிறுத்தப்பட்டிருந்த ஓடுதளம் அருகே ராணுவ வாகனங்கள் விரைந்தன. சில நிமிடங்களில் ஆப்கான் ஏர் விமானத்தை சுற்றிவளைத்த ராணுவம், உடனடியாக பாதுகாப்பு மிகுந்த பகுதிக்கு விமானத்தை திருப்பி விட்டுள்ளனர்.

குறித்த விமானத்தில் விமான பணிப்பெண்கள் 9 பேர் உள்ளிட்ட 134 பேர் இருந்துள்ளனர்.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், விமானியின் கைப்பிழையே குறித்த விமான கடத்தல் எச்சரிக்கைக்கு காரணம் என தெரியவந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்