அரசின் இலவச பொருட்களை உடைக்கும் விஜய் ரசிகர்கள்: பிரபல நகைச்சுவை நடிகர் என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Raju Raju in இந்தியா

சர்கார் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சியை விஜய் ரசிகர்கள் பலரும் நிஜமாக்கி வரும் நிலையில் அது குறித்து நடிகர் கருணாகரன் பேசியுள்ளார்.

தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில் இடம்பெற்ற, அரசு மக்களுக்கு கொடுத்த இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சி சர்ச்சையை கிளப்பியது.

இதையடுத்து இக்காட்சி நேற்று நீக்கப்பட்டது.

காட்சிகள் நீக்கப்பட்டதை கண்டிக்கும் விதமாக தமிழக அரசு கொடுத்த மின்விசிறி, மின்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்களை விஜய் ரசிகர்கள் தீயிட்டு கொளுத்தும் காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

விஜய் ரசிகர்களின் இச்செயல் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

மாணவர்களின் கல்விக்கு உதவும் நோக்குடன் வழங்கப்பட்ட மடிக்கணினிகளும் விஜய் ரசிகர்களின் தாக்குதலுக்கு தப்பவில்லை. இக்காட்சிகள் தவறான புரிதலையும் தேவையற்ற சேதத்தையும் ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக பிரபல நகைச்சுவை நடிகர் கருணாகரணிடம் டுவிட்டரில் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதில், உங்கள் வீட்டில் இருக்கும் இலவசங்களை தூக்கி போடவில்லையா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அவர், இல்ல ஃப்ரோ, நான் தூக்கி எறிந்தால் நான் தான் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்