மருத்துவ கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலன்

Report Print Vijay Amburore in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரிந்து சென்ற காதலியின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வினை. இவரும் அப்பகுதியை சேர்ந்த 25 வயதான மருத்துவ கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர்.

கடந்த சில நாட்களகாவே சம்மந்தப்பட்ட மாணவி வினையை கண்டுகொள்ளாமல் தவிர்த்து வந்துள்ளார். அவருடைய செல்போன் வரவுகளுக்கும் பதில் கொடுக்காமல் மாணவி தவிர்த்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வினை, மாணவியின் அந்தரங்க புகைப்படங்களை இன்ஸ்டாகிராமின் போலி பக்கத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்.

இந்த நிலையில் சம்மந்தப்பட்ட மனைவி பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், கடந்த 5ம் தேதி மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்தபோது, வினை என்னுடைய காரை வழிமறித்து உள்ளே ஏறினான்.

என்னுடைய செல்போனை பறிக்க முயன்றான். அதனை நான் தடுக்க முயன்ற போது, என்னை கடுமையாக தாக்கிவிட்டு, பாலியல் துன்புறுத்தல் செய்தான். மேலும் இதுபற்றி வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாக புகார் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், குற்றவாளி பற்றிய விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்