மகளின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட பெற்றோர்! பதறவைக்கும் சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

புனே மாநிலத்தில் பில்லி, சூனியம் வைத்ததாக கருதி மகளை கண்முன்னே பெற்றோரை வெட்டிக்கொலை செய்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புனேவிலிருந்து 50 கிமீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர்கள் நவசு முகானே (55) - லீலாபாய் (47) தம்பதியினர்.

இவர்களுக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஜெய்த்து போர்க்கர், பபன் முகானே ஆகியோரின் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் ஜெய்த்து போர்க்கரின் மகளுக்கு வயிற்று பகுதியில் நீர்க்கட்டி ஏற்பட்டுள்ளது. அதேசமயம் பபன் முகானே மனைவியின் உடல்பகுதியில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதற்கு லீலாபாய் தான் காரணம் என நினைத்த இருவரும், அவர்களுடைய வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்ற, கட்டைகளை கொண்டு இருவரும் லீலாபாய் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

உடனே நவசு, அவர்களை தடுக்க முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் அங்கிருந்த கூர்மையான ஆயுதங்களை கொண்டு நடத்திய தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார், சம்பவம் குறித்து நவசு மகளிடம் விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய ஜெய்த்து போர்க்கர், பபன் முகானே இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்