நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

Report Print Raju Raju in இந்தியா

கமல்ஹாசன் பங்கேற்ற கட்சி கூட்டத்துக்கு வந்த பெண் மீது கொடி கம்பம் விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மாவட்டத்தில் உள்ள பாப்பாரப்பட்டி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசினார்.

பேசிமுடித்தபின்னர் அவர் புறப்பட்ட போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

அப்போது அங்கிருந்த பாமக கட்சியின் கொடி கம்பம் உடைந்து விழுந்தது. அதில், கெட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த காந்திமதி என்ற பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாப்பாரப்பட்டி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்